தமிழில் பேசுவது அத்தனை பெரிய வேலையா?
இந்த வாரம் முழுக்க சுத்த தமிழில் பேசலாம் என்று எங்களுக்குள் ஒப்பந்தம். காலை 8 மணி பரபரப்பில், என் காலுறை எங்கே? என்றதும், சட்டென்று ஒரு நிமிடம் யோசித்து ஓஹ்.. socks ? என்றேன்.
breakfast சாப்பிட வரேளா என்று கேட்டு பழகி விட்டது. காலை உணவு தயார் என்று செந்தமிழில் சொன்னேன். dress change பண்ணிடேளா என்று செப்ப வந்து, பின்னர், ஒரு முறை சிந்தித்து, உடை மாற்றி கொண்டீர்களா? என்றேன்.
இன்று உங்களுக்கு meeting எத்தனை மணிக்கு என்று கேட்க நினைத்து, கூட்டம் எத்தனை மணிக்கு என்று கேட்டேன். எனக்கே அரசியல் பொது கூடங்களை பற்றி கேட்ட மாதிரி இருந்தது.
laptop on ஆகி இருக்கா, என்று வழக்கமாய் கேட்கும் கேள்வி, என் மடி கணினி திறக்கப்பட்டு உள்ளதா என்று மெதுவாய் வந்தது. என் கைபேசி எங்கே? என்ன அலைவரிசை பார்க்கலாம் போன்ற பரிமாற்றங்கள் எங்களுக்கே, விநோதமாய் இருந்தன. ஒரு மொழி சரியான முறையில் பயன்படுத்த செழிக்கும்.
நாம் எத்தனை தூரம் தமிழை விட்டு விலகி இருக்கிறோம் என்பது நன்றாக புரிந்தது.
அடுத்த ஐந்து நொடிகளில் உங்களால், கீழ்காணும் சொற்களுக்கு, சரியான தமிழ் வார்த்தைகளை சொல்ல முடிகிறதா?
1. Laptop
2. FM Radio
3. Shampoo
4. ToothBrush
5. Money purse
6. Grinder
7. Tea
8. Coffee
9. SMS
சரியான தமிழ் சொற்கள் இதோ:
1. Laptop - மடி கணினி
2. FM Radio - பண்பலை வானொலி
3. Shampoo- கழுவான்
4. ToothBrush- பல் துலக்கும் தூரிகை
5. Money purse- பணப்பை
6. Grinder- மாவரைக்கும் இயந்திரம்
7. Tea- தேநீர்
8. Coffee- குளம்பி
9. SMS- குறுந்தகவல்
அருமையான பதிவு... எனக்கும் தமிழ் பித்து உண்டு... இப்படி முயற்சித்தது இல்லை... முயற்சி செய்து பார்கிறேன்... நன்றி..
ReplyDeleteஊக்கம் அளித்தமைக்கு நன்றி!. நான் உங்கள் வலைபதிவை படித்து இருக்கிறேன். அருமையாய் எழுதுகிறீர்கள்
ReplyDeleteகாஃபீ, ஷாம்பூ, டூத் பிரஷ்..... இதுக்கெல்லாம் தமிழ்ல சரியா வார்த்தை இல்லேங்கறது நீங்க சஜ்ஜஸ்ட் பண்ண வார்த்தைகள்ல இருந்தே தெரியுதே... இப்படியெல்லாம் கடையில போயி கேட்டா அடிக்க வந்தாலும் வருவான்:))
ReplyDeleteஅயலகத்தில் வாழ்ந்தாலும் கூடுமான வரை தமிழில் பேசத் தொடங்கி விட்டேன். குறிப்பாக முதலில் நான் கைவிட்டது இந்த "பண்ணிகளை", ஆன் பண்ணு, அயர்ன் பண்ணு என சொல்வதை விட்டுவிட்டேன், போடு, அணை, அழுத்து என தமிழ் வினைச் சொற்களைப் பயன்படுத்தலானேன். பிறகு ஈமெயில், செல்போன் போன்ற பயன்பாட்டுச் சொற்களை தமிழில் சொன்னேன் மின்னஞ்சல், செல்பேசி . முதலில் கூச்சமாய் இருந்தது அப்புறம் பழகிவிட்டது. தமிழில் பேசத் தொடங்கியதும், என் ஆங்கில சம்பாசணங்கள் சுத்தமாகத் தொடங்கின, ஆங்கிலம் பேசும் போது தமிழ் தாக்கம் குறைவு. இது தமிழ், அது ஆங்கிலம் எனப் பிரித்தறிய மூளைக்கு புரியத் தொடங்கிவிட்டது போல. :)
ReplyDelete