Friday, January 11, 2013

கப்பல் பயண அனுபவம்- Singapore to Singapore-வட்டச்சுற்று கப்பல் (? :))-

சுற்றிலும் கடல்; அழகான முழு நிலா.
எத்தனை முறை பார்த்தாலும், அலுக்காத அனுபவம். மனது முழுவதும், அள்ளி அள்ளி, நிரப்பிக்கொள்ள தூண்டும், அழகு.இந்த அழகான அனுபவம் பற்றியே, இந்த பதிவு.

என் பள்ளி பருவத்தில், எப்போதாவது ஒரு முறை, கிடைக்கும், ரயில் பயணத்தில், எப்படி, மனம், குதியாட்டம், போடுமோ, அதைப்போல, மனம், ஆர்ப்பரித்தது.-முதல் கப்பல் பயணத்தில்!.

சமீபத்தில், 3Dல் பார்த்த "Life of Pi"  -கப்பல் பயணத்தைப்பற்றிய ஆசையை அதிகப்படுத்தியது.சரி சரி!!!- விஷயத்துக்கு வான்னு திட்றது கேக்குதுங்கோ!
கிருஸ்துமஸ் விடுப்பில், ஒரு நாள் பயணமாய், சிங்கையிலிருந்து- சிங்கை (&%$^?) போவதென்று முடிவானது. 1.5 வயசு சுட்டிப்பையன், அதுக்கு மேல கப்பலில், தாக்கு பிடிப்பானானு கவலை எங்களுக்கு!.

Sailing Date: 28-12-12
Ship: Super Star Gemini
Boarding starts at: 4pm SGT
Sailing Start Time:8pm SGT
Boarding from: Harbour Front-Cruise Center, Singapore


பயணச் சீட்டு, விமானத்தை விட அதிக விதிகளைக் கொண்டிருந்தது.
உங்கள் அறையிலிருந்து கடலைப் பார்க்க வேண்டுமானால், அதிக கட்டணம், கொண்ட அறைகள்!.
ஆளுக்கு 50 கிலோ, சாமான் கொண்டு வரலாம், உங்கள் குழந்தை உங்கள் பொறுப்பு,...:)- உள்பட.!.

இரவு 8 மணி கச்சேரிக்கு, 4 மணிக்கே ஆஜராகி, இடம், பிடிக்கும், மாமா மாமிகளை, போல :)-_, குடுவையில், வென்னீர், பெட்டி நிறைய சாமான், பையனுக்கு, தோசையோடு, நாங்களும், 4 மணிக்கே ஆஜரானோம். கப்பல், எங்களுக்கு முன்னாடியே 10வது பிளாட்பாரத்தில் (?), நின்று எங்களை எதிர் நோக்கி இருந்தது.
எல்லாரும் பாத்துக்குங்க நாங்களும்  ரவுடி தான்னு- கப்பலுக்கு முன்னாடி நின்னு, சில போஸ்:)-.



Infront of SuperStar Gemini


In our room with Pot hole view
சில புகைப்படங்கள் இங்கே....
அப்புறம்,  check-in- baggage, boarding passனு,எல்லாம், விமான பயணத்தைப்போலவே.எங்க மன்னார்குடி கோவில், திருவிழால காணாம போன மாதிரி (?:)), ஆயிடுமோங்கற அளவு ஒரே கூட்டம். பத்தடிக்கு பத்தடி, சில கப்பல், பணிப்பெண்கள், வரவேற்பு நடனம், வேற. சித்தார்த்தின் சிணுங்கல்னு- ஈஸ்வரா- இப்பவே கண்ணைக்கட்றதேனு இருந்தது. 
ஒரு வழியாய் எங்கள் அறைக்கு சென்றோம், கப்பல் கிளம்பி ஒரு மணி நேரத்தில், பெட்டியை நம், அறை வாசலில், தருவார்கள்.எங்கள் அறையில், இரண்டு, வட்ட ஜன்னல்கள். (Pot holes).
கப்பலில் மொத்தம் 12 மாடிகள்; 5ஆம் தளத்திலிருந்து, பயணிகள் அறைகள்.
எங்கள் அறை, 6ஆம் தளத்தில் இருந்தது. . ஒவ்வொரு தளத்திலும், 85 அறைகள். அறைகளில், ஒரு சொகுசான விடுதியை போல- Double bed, A/C, TV முதலியன அடக்கம்.

"பந்திக்கு முந்து"னு - உணவகத்திற்கு வந்தோம். (9-ம் தளம்). 3 மின் தூக்கிகள், மற்றும், படிக்கட்டுகள் இருந்தன. நாங்க, சைவம்னு அங்க போய் சலாம் அடிச்சோம், -ஜைன மத உணவு தந்தார்கள்- சாதம், கடைந்த பருப்பு, கொண்டைக்கடலைக்கறி என. பழங்கள், cake முதலியவற்றை பதம் பார்த்தோம்.
7.30 மணிக்கு, எல்லோரும், பாதுகாப்பு வழிமுறைகளை எடுத்துக்கூறும், செயல்முறை வகுப்பிற்கு வர வேண்டும் என அறிவித்தார்கள்.  அங்க போய் பார்த்தா வாங்க வாங்கனு ஒரே வரவேற்பு. அவ்வளவு கம்மி ஆளுங்க.

அப்புறம், 8.30மணிக்கு ஐரோப்பா குழுவின், சிறப்பு நடனங்கள்-உள்ளே இருந்த பிரம்மாண்ட அரங்கில்..இதுக்கு, House Full:)-...அது, முடியுமுன்னே, எங்கக் குட்டிப்பையன் தூங்கிட்டான். அப்புறம், ஒரு ஒரு, மாடியாப்போய் பார்த்தோம்.
ஒரு தளம், உடற் பயிற்சி கூடம், மற்றும், மசாஜ். அப்புறம், சின்ன குழந்தைகளைப்பார்த்துக்க ஒரு தனி சேவை..?. ஒரு மணி நேர அடிப்படையில், தனி கட்டணம். என்னவோ!!!!.
ஒரு தளத்தில், பல, உணவகங்கள்; மற்றும், மதுபானக்கூடங்கள். மேல் தளத்திற்கு, வந்து, நீரலைகளைப்பார்க்கும், வரை, கப்பல், நகர்வதே தெரியவில்லை.

விஜயவாடாவிலிருந்து, ஒரு டாக்டரின் குடும்பம் வந்திருந்தது. அவர்களும், எங்களைபோல, நிலா ரசிகர்களோ என்னவோ?.

அந்த மேல் தளத்தில், Jogging track இருந்தது.நிலவை ரசித்தபடி நடந்தோம் !


We... Posing before the fire drill
Auditorium inside the ship
Nila Nila.
சில புகைப்படங்கள் இங்கே....

கப்பல், நகர நகர, நிறைய, சரக்குக்கப்பல்கள், தென்பட்டன. எங்க, ரங்கமணி, இதுக்கு, முன்னாடி, சரக்குக்கப்பல், சம்பந்தமான வேலை பார்த்தவர் என்பதால், என்னிடம், அவைப்பற்றி விளக்கினார். ஒரு வகையில், என்னடா, இங்கயும், ஒரே traffic...
பார்க்கும் திசை எல்லாம்- எங்கெங்கு காணினும் கடல் என்று இருக்காதா என்று இருந்த்து.

ஆனா, இந்தியப்பெருங்கடலின், இந்தப்பகுதியில், பல்லாயிரக்கணக்கில், தீவுகள், இருப்பதால், கப்பலில் இருந்து, இறங்கும் வரை, ஏதாவது, நிலப்பரப்பு தென்பட்டது.ம்ம்ம்ம்ம்... அது சரி, அடுத்த தடவை, பசிவிக் பெருங்கடல், பக்கம் போய் பாக்கணும்.. :)-

ஒரு வழியா, 11 மணிக்கு, எங்க அறைக்கு திரும்பினோம். நான் மட்டும்,இரவு முழுக்க, நடு நடுவில், அந்த pothole வழியா, வேடிக்கை பார்த்தேன்.

மறு நாள் காலை, எங்கள் பெட்டிகளை, 11 மணிக்கு முன்னர், எங்கள் அறை வாசலில், வைக்க சொன்னார்கள்.
குழந்தை எழுந்த பிறகு, காலை உணவிற்குப்பின், மறுபடி ஒரு முறை, மேல் தளத்தில் சுற்றினோம்.
(கொடுத்த காசுக்கு, கப்பல், சிங்கைக்கு வெளியே, இந்தொனீசியா, மலேசியா பகுதிகளை, சுற்றி  வந்திருந்தது).எங்க அலை பேசி, கப்பல், அலையும் நாடை அறிவித்தது.

கடைசியில,  தான், Passports,  திருப்பிக்கொடுப்பாங்க. அது, சரியா organize  பண்ணாம, ரொம்ப நேரம் ஆயிடுச்சு.

திரும்பி வரும் போது, நம்ம திருநாள், கடைக்கூட்டம், மாதிரி, இருந்தது. இதையும் கொஞ்சம், கவனிக்கலாம். (Attn: Star Cruise).



A cloudy morning-in the Ship, amid raindrops

Layout of the Ship




Some Nice Views...

In the Jogging track..

View of Sentosa from the Ship


அப்புறம், கப்பலை விட்டு, இறங்கி, பெட்டி படுக்கையையை எடுத்துக்கிட்டு, ஒரு வழியா, மதியம், 2 மணிக்கு, வீடு, வந்தோம்.

 பின் குறிப்பு:
நாங்க ரொம்ப நல்லவங்கனு சொல்லி, எங்களை, இன்னொரு முறை கூட்டிட்டு, போகப்போறாங்கோ! (Complimentary Cruise...!!:).வாரீயளா? நீங்களும்??

கன்யாகுமரி பக்கம், இதை மாதிரி, cruise இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.!




11 comments:

  1. நல்லாத்தான் இருக்கும்? ஒரு முறை கொச்சியில் ஆரம்பிக்கறதா சொல்லி, காசெல்லாம் கட்டி,கடைசீல கூட்டம் பத்தாதுன்னு சொல்லு கேன்சல் பண்ணீட்டாங்க. ஆகக்கூடி கப்பல் பயணம் இன்னும் பாக்கி இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் விடணும் பார்ப்போங்க :)-

      Delete
  2. thanks for sharing for your nice journey

    ReplyDelete
  3. Nice sailing experience. I have been sailing in ships for many years. Still I enjoyed your writings about ship. you mentioned that he was in profession related to shipping. Is he still working in that industry?.
    I have been sailing for many years and always wanted to go around places like singapore (not just visiting ports. I have been visiting many such ports, but never spent much time outside there. like you did a voyage in the sea, for me land tour).
    I did this time. The day you were sailing, I was with my family spending good time in singapore streets.

    ReplyDelete
    Replies
    1. Hi Sir, Hubby is not in same industry now. Nice to hear that you were visiting Singapore same time

      Delete
  4. super writing...super photos pa....very interesting to read..:-)

    ReplyDelete