Tuesday, August 14, 2012

வாழ்வின் வளைவில்- சிறுகதை முயற்சி!

"ரொம்ப பிசியா இருக்கு லைப். வீக்கெண்டு கூட செம டைட்டா போகுதே !கடவுளேனு இருக்குங்க!" என்றாள் சந்தியா." எனக்கு புரியுதும்மா. ஒரு பக்கம் வேலை,இன்னொரு பக்கம், ஒன்றரை வயசு குழந்தை; நாம மாசம், ஒரு வாட்டியாவது எங்காவது போயி வர பாப்போம்" என சமாதானப் படுத்தினான் கார்த்திக்."இன்னும் நீங்க டயத்தில வீட்டுக்கு வரதில்ல. வீட்டுல வேலைக்கு ஆள், இருந்தாலும், நீங்க நேரம் கொடுக்கலைன்னா கொழந்த ஒட்டாம போயிருவாங்க!" என வழக்கமான பட்டாசாய் பொரிந்து தள்ளினாள் சந்தியா.அப்போதைக்கு அமைதி காப்பது என்று பதில் பேசாமல், விட்டான் கார்த்திக்.

அழகாய் தொடங்கிய திருமண பந்தத்தில், 4 வருடம் கழித்து ஒரு குழ்ந்தை.இருவருக்கும் ஒரே பன்னாட்டு நிறுவனத்தில் வேலை. ஒன்றாக வேலைக்கு போய், ஒன்றாய் தான் திரும்புவார்கள். நல்ல ஆழமான நட்பில், அழகான புரிதலுடன் வாழ்க்கை.

இசை, சமையல், எழுதுவது என பலவற்றில், ஆர்வம், சந்தியாவிற்கு.கார்த்திக்கின், தேவை அறிந்து, அழகாய், செய்வாள். நல்ல சுறுசுறுப்பு உடையவள்.

-நிறைய நேரம், இத்தனை பொறுமையாய் ஒரு கணவன் கிடைத்தது கடவுளின் வரம் என்று அவளும், இத்தனை ரசனையாய், பொறுப்பாய், மனைவி அமைந்தது,, அதிஷ்டம் என அவனும், நினைத்ததுண்டு.
குழந்தை பிறக்கும் வரை, இருவருக்கும், ஒன்றாய், திரைப்படம் பார்க்கவோ, நண்பர்களோடு வெளியே செல்லவோ நேரம் இருந்தது.குழந்தை, குறை மாதத்தில், சிறியதாய் பிறந்தபின், குழந்தையை, நல்ல ஆரோக்கியத்தில், பார்க்கும் வரை, இருவருக்கும், உயிரே இல்லை.தன் முழு நேர வேலையை, போராடி, பகுதி நேரமாக மாற்றிக் கொண்டாள் சந்தியா.

வேலைக்கு போவதால், குழந்தையின் வருங்காலம் நன்றாக இருக்கும் என நம்பினாள். அலுவலகம் தவிர, எங்கும், கார்த்திக்குடன், வெளியே செல்வதை தவிர்த்தாள்; சில நேரங்களில், குற்ற உணர்வோடு, சென்று, அவசரமாய் திரும்புவாள்.
குழந்தைக்கு, வேண்டிய உடை, விளையாட்டு பொருட்கள், எல்லாம், சந்தியா ஆசை ஆசையாய் வாங்கி  வருவாள்.சில நாள், குழந்தைக்கு ஜுரம், இருந்தால், இரவு முழுதும், மடியில், வைத்துக்கொண்டிருப்பாள்.

கார்த்திக்கை விட குழந்தை சந்தியாவிடம், தான் அதிகம் ஒட்டினான். தன் கணவன், இன்னும் அதிக நேரம் குழந்தையோடு செலவழிக்க வேண்டும், என்று எதிர்ப்பார்த்தாள் சந்தியா. தான் அதிக நேரத்தை க்ரிக்கட் பார்ப்பதில், செலவழிப்பதை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று, நினைத்தாலும், அதை, பெரும்பாலும், செயல்படுத்த முடியவில்லை  கார்த்திக்கினால்.சலிப்பின் உச்சத்தில், இருந்த சந்தியாவை, இந்தியாவிலிருந்து வந்துள்ள நண்பனைப்பார்க்க கூட்டி சென்றான் கார்த்திக்.

சிங்கப்பூரில், city hall-லில்உள்ள அன்ன லட்சுமி உணவகம். அழகான பழங்கால மர வேலை பொருட்களுடன், இருந்தது.நண்பர்கள் இருவரும், 13 ஆண்டுகள் கழித்து சந்திக்கிற மகிழ்ச்சியில் இருந்தனர். குழந்தை சிறிது நேரத்தில் தூங்கி எழுந்தான். புதிய சூழலை ஆவலாய் பார்த்த்தான். சத்தமிடும், காலணியில், பக்கத்தில், உள்ளவர்களின் கவனத்தை ஈர்த்த்தான்."அம் அம்" என்று மழலை மொழி சொன்னான்.குழந்தை சந்தியாவை விட்டு இருக்க வில்லை. எனவே அவனை, ஒரு கையில், வைத்தபடி உண்டாள்.வெளியே வந்ததும், நண்பர் கேஷவ், வேறங்கும், போகலாம்  என கேட்க, அருகில் உள்ள  Gardens by the Bay-க்கு போகலாம் என டாக்சி எடுத்தனர்.

டாக்சி ஓட்டுனர், வாய் ஓயாமல், இந்தியாவில், எங்கிருந்து வந்தீங்க, சென்டோசா பார்த்தாச்சா? என கேட்ட வண்ணம் வந்தார். அதிகமாய் பேசிய  ஓட்டுனரை மனதில் கொட்டினாள்!

முன் இருக்கையில், இருந்த நண்பனை இருக்கை பட்டி அணிய சொன்னான் கார்த்திக். பின் இருக்கையில், சந்தியாவின் மடியில் குழந்தை. "என்னடா இது, பெருந்தொல்லை. கொஞ்ச நேரம் வாயை மூட மாட்டாரா ?" என நினைத்தாள் சந்தியா.

ஒரு மூவழி சாலை சந்திப்பில், சிவப்பு விளக்கில், வலப்புறம் திரும்பினார் டிரைவர். சட்டென மிக பக்கத்தில், மற்றொரு கார்; ஒரு பெரும் சத்தம்!. மற்ற கார், இவர்களின், டாக்சியின், இரு பக்க கதவுகளில், இடித்தது. குழந்தை பத்திரமாக கட்டிக்கொண்டாள் சந்தியா.அவளின், முழங்கையில், நல்ல இடி. என்ன நடந்தது என உணர சில கணங்கள் பிடித்தது.

கடவுள் புண்ணியம், யாருக்கும் பலத்த அடி இல்லை. குழந்தை பயத்தில் அழுதது. அதன், நெற்றியில், ஒரு புடைப்பு தெரிந்தது.

அடுத்த 5 நிமிடத்தில், பக்கத்தில், வேலை செய்து கொண்டிருந்த இந்தியர்கள் சிலரும், நடை பாதையில் இருப்போரும், ஏதாவது முதல் உதவி வேண்டுமா? என கேட்டனர். போலீஸ்  வரும் வரை, நடை பாதையில், அமர்ந்து, குழந்தையை சமாதானப்படுத்தினாள்.போலீஸ் வந்ததும், பின்னால், ஆம்புலன்ஸ் வந்தது. முதல் கேள்வி "Are you alright? Can someone tell us how this accident happened?"என்றதும்,எப்படி இது நடந்ததென விவரித்தான் கார்த்திக்.பெரிய அடி இல்லை. ஆனால், குழந்தையை ஒரு டாக்டரிடம் காட்ட வேண்டும், தலையில், புடைத்து இருக்கிறது" என்றான்.

ஆம்புலன்ஸில், பக்கத்திலிருந்த KK மருத்துவமனைக்கு சென்றனர். டாக்டர், பரிசோதித்த பின்," அடுத்த 48 மணி நேரத்தில், உங்களுக்கு ஏதாவது, குழந்தையிடம், மாறுதல், தெரிந்தால், மீண்டும் கொண்டு வரச் சொல்லி அறிவுறுத்தினார்.எல்லாம் முடிந்து வீடு வர மணி ஏழானது.

கண நேரத்தில், தப்பித்ததால், கடவுளுக்கு நன்றி என சொல்லும் மனதிற்கும்,  ஏன் இப்படி எல்லாம் நடக்கிறதென மனதிற்கும் இடையே ஊசலாடியபடி, ஜன்னலின் அருகில், நின்றிருந்தாள் சந்தியா.

"என்னம்மா தூக்கம் வரலியா? "என அவள், தோள் தொட்டு அணைத்தபடி நின்றான் கார்த்திக். சட்டென, தொண்டை அடைத்தது சந்தியாவுக்கு.மெல்ல அவன் மார்பில் சாய்ந்தாள். ரொம்ப பயந்திட்டேங்க! ஏதாவது குழந்தைக்கு ஆகி இருந்தா?" என அழுதவளை தேற்றினான் கார்த்திக்.

இன்னிக்கு ஒரு செகண்ட்ல, கடவுள், என்னை, வாழ்க்கையோட அர்த்தத்தை புரிஞ்சுக்க வெச்சுட்டார்மா! நீயும் குழந்தையும் இல்லாம நான் இல்லடா! உன்னோட சலிப்புக்கும், கோபத்துக்கும் பின்னால, நான் எவ்வளவு  selfishஆ இருந்திருக்கேன்னு புரிஞ்சுகிட்டேன்.


இனிமே நான், உன்னோடயும், குழந்த கூடயிம், தான் அதிக நேரம் இருக்க போறேன். நம்ம வாழ்க்கை நம்ம பத்தின அழகான நியாபகங்களோட இருக்கட்டுமே.! I will say no to watching cricket in internet. என்ன OKவா?  கொஞ்சம் சிரிங்க மேடம்" என்றவனை பார்த்து, பளீரென புன்னகைத்தாள் சந்தியா.
வாழ்வின் ஒரு ஆபத்தான வளைவு அவர்கள் இருவரையும் சிந்திக்க வைத்தது.

 நானும் ரொம்ப  moodyஆ இருந்திட்டேங்க. நானும் நம்ம ரெண்டு பேருக்கும்னு தனியா டைம் ஒதுக்கறேன். என்ற சந்தியாவை புதிய அர்த்தத்தோடு பார்த்தான் கார்த்திக்.  வீட்டில், டாக்சீ கம்பெனி அனுப்பிய, புதிய மலர் கூடை அவர்களைப் பார்த்து சிரித்தது.

1 comment: