சன் - பட்டி மன்றம்: கடந்த பத்துக்கும், மேற்பட்ட ஆண்டுகளில், மாற்றம், நிகழ்ச்சியின், கருத்திலோ, படைப்பிலோ இல்லை. நகைச்சுவை மட்டுமே குறிக்கோள் போல் தெரிகிறது. நடுவர். பேராசிரியர். சாலமன் பாப்பையா. நிகழ்ச்சியில், பேசிய திருமதி. புவனா முதலிய பெண்கள், ஆங்கிலத்தை, சரி சம விகிதத்தில், கலந்துபேசியது, வருந்தத்தக்கது.
ஊடகங்களுக்கு, புதிய சொற்களைப் பயன்படுத்துவதிலும், தாம் சார்ந்துள்ள மொழியைச் சரியாகப் பயன்படுத்துவதிலும், ஒரு பொறுப்பு இருக்க வேண்டும். கவனத்தில் கொள்வார்களா?
விஜய் ஒளிவழி- Records (சாதனைகள் ???)
சமூகத்தின் பார்வையில், அறிமுகமாகாத பல சாதனையாளர்களுக்கு ஒரு மேடையாக அமைந்தது.
மண் ஓவியம் முதலிய பல கண்களுக்கு விருந்து. புதிய முயற்சி, வாழ்த்துகள்.!
சிங்கப்பூரில் தமிழ்: அரசின் நான்கு தேசிய மொழிகளில்,ஒன்றாய், தமிழ் அழகாய் வாழ்கிறது, வளமாக! இங்கு, தமிழ் செய்தி பார்த்தே தமிழின், பல புதிய சொற்களை அறியலாம்.
அவற்றில் சில:
1. ஓட்டங்கள்- Runs (மட்டைப்பந்து பற்றிய செய்திகளில்). தமிழ் நாட்டின், சன் தொலைக்காட்சி முதலியவற்றில், Run-களை குவித்தனர், என்று, ஆனந்தமாய், வாசிக்கின்றனர்!!! :(-
2.திருமதி என்ற சொல்லுக்கு இணையாக, திருவாட்டி
3. மதியுரை அமைச்சர்- Minister Mentor
4.ஒளிவழி - Channel
5.இசை வட்டு- Musical CD
6. வணிக விளம்பர இடைவேளை- Commercial Break
7. ஒளியூட்டு விழா- Lighting ceremony
8. பேராளர்கள்- VIP
9. பதின்ம வயதினர்- Adolescents
வசந்தம் ஒளிவழியில் சிறந்த நிகழ்ச்சிகள்
1. நாம் - நம்மை பற்றி/ நம்மை சுற்றி
இந்த நிகழ்ச்சி, சிங்கப்பூரில், மக்களின், கருத்துகளை அரசு அறிய உதவுகிறது.எந்த ஒரு புதிய மாற்றத்திலும், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிய உதவுகிறது. சிங்கப்பூரில், நடக்கும் புதிய முயற்சிகள், காட்டப்படுகின்றன.
2.பொற்காலம்: முதியவர்களையும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றியது. உண்மை சம்பவங்களை அடிப்படையாய் கொண்டு, நாடக வடிவில், தீர்வுகளையும் சொல்கிறார்கள்.
3.பௌர்ணமி:
பதின்ம வயதினர், சந்திக்கும் மனமாற்றம், தடுமாற்றங்கள் பற்றியது.
பல நல்ல நாடக தொடர்களைப் பார்க்க முடிகிறது. (திரு.பாலசந்தரின், கையளவு மனசு).
முழு நேர ஒளிவழியாய், முதல், ஆண்டை இன்று கொண்டாடும், வசந்ததிற்கு, மனமார்ந்த பாராட்டுகள், நல்ல முயற்சிகள், என்றும் தொடர வாழ்த்துகள்!!
வாழ்த்துக்கள் வித்யா
ReplyDelete