Thursday, June 20, 2013

புகை மூட்டம் மாறுமா? Will the Haze leave us?

தெளிவான நீல வானத்தைப்பார்த்து, ஒரு வாரம், ஆகப்போகிறது!!!. மிக மிக மோசமான, மாசான காற்று மண்டலம், எங்களை சூழ்ந்துள்ளது.
 சிங்கப்பூரை, உலுக்கும், இந்த நிகழ்வுக்குக் காரணி, இந்தொனீசியா.

காடுகளை அழிக்க, இந்தொனீசியா, வருடாவருடம், தீ மூட்டுகிறது. இயற்கையை, அளவுக்கு மீறி , அழிக்க நினைக்கும், மனிதர்களின், பேராசை, என்று மாறுமோ, தெரியவில்லை.
ஒரு பக்கம், நாம மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்னு, சொல்றோம், ஆனா இங்க நடப்பது மிக மோசமான அவலம்.


இன்னும், 20 வருடங்களில், இந்தொனீசியாவின், இயற்கை வளமான, காடுகள், முற்றிலும் அழிந்துவிடும். காடுகளின், மரங்களை, வெட்ட செலவாகுமாம்; அதனால், எரிக்கிறார்களாம். (ரொம்ப சரி;:().

ஒரு நாளைக்கு, 20 சிகரெட் புகைத்தால், என்ன பாதிப்பு வருமோ, அதை, நாங்கள், எல்லாரும், இந்த காற்றை சுவாசிப்பதால், பெறுகிறோம். சின்ன சின்ன குழந்தைகளுக்கு, அதிக மூச்சு திணறல்,ஏற்படலாம் !:(

இன்று காலை, காற்று மிக மோசமான நிலையைத் தொட்டது. வரும், வழியில், காற்றில், புகை வாசம் தான். எல்லாக் கடைகளிலும், முகக் கவசங்கள், விற்று தீர்ந்து விட்டன.
சிங்கை அரசு தன்னால், முடிந்தவரை, இந்தொனீசியாவை வலியுறுத்தி வருகிறது.
பக்கத்து நாடுகள், இருந்தால், என்ன, இறந்தால் என்ன என்ற மனோபாவம் தான், தெரிகிறது.
யாரும் தப்பித்தவறிக்கூட, மழையை இப்போது மறுதலிக்க மாட்டார்கள்.
மழை வந்தாலோ, அல்லது, காற்றின், திசை மாறினால் மட்டுமே, இந்த மூட்டம், எங்களை விட்டு அகலும்.
சன்னலைத் திறக்க முடியாமல், குழந்தைக்கு ஒன்றும், ஆகக்கூடாது என்ற கவலை, எல்லாம், சேர்ந்து, மனதளவில், மிக மோசமான மூட்டம் இது.!!!
வான் மழை, விரைவில் பொழிக!



(Courtesy: Haze picture- Straits times)